178 பற்றற்றார் பற்றும் மாணிக்கவாசகர் திருக்கோவையார்
178 பற்றற்றார் பற்றும் முருகா என்பது ஒரு பெயர் அல்ல. அதுவே பலப்பல பெயர்களும், அதில் உள்ளடங்கிய வெவ்வேறு பொருள்களும் கொண்டது. அதனால் தான் ‘வாக்கிற்கு அருணகிரி’ என்று உலகத்தவரால் புகழப்பட்ட அருணகிரிநாதர் ‘ முருகா என்னும் நாமங்கள்’ என்று கந்தர் அலங்காரத்தில் குறிப்பிடுகின்றார் முருகன் என்றாலே நாம் அனைவருக்கும் அவனது அழகு முகம் நமது மனதிலே வந்து நிற்கும். அழகான ஆடவனைக் கண்டால் ‘முருகனோ’ என்று வியந்து பாராட்டுவது வழக்கம். நமது தலைவனும் அப்படியே. இளமையும் அழகும் நிறைந்தவன். வாக்கிற்கு அருணகிரி என்பது போல ‘நோக்கிற்கு நக்கீரர்’ என்பது ஆன்றோர் சொல்லாகும். திருமுருகாற்றுப்படை என்ற நூல் தான் , சைவத் திருமுறைகளில் மிகவும் பழமையானதாகும் . அது திருமுறையிலும் வரும், அதே சமயம் பத்துப்பாட்டில் முதல் நூலாகவும் வரும். ஒரே நூல் இலக்கியத்திலும் மற்றும் திருமுறையிலும் வரும் சிறப்பு வேறு எந்த நூலுக்கும் இல்லை. 10345 பாடல்களைக் கொண்ட கந்தபுராணம் பாடிய கச்சியப்ப சிவாச்சாரியார் ‘...