20260927 ஆண்ட அரசு உழவாரப்பணி கோலார் அருகில் ஸ்ரீனிவாசபுரா
2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத எங்களது பெங்களூரு ஆண்ட அரசு உழவாரப்பணி 27.09.2026 அன்று கோலார் அருகில் உள்ள ஸ்ரீனிவாசபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதிதேவி சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில், சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கோவிலின் மேப் இதோ: https://maps.app.goo.gl/iU99H2TGA9e5ks8fA?g_st=ic நம்ம பிள்ளைகளுக்கு ஒரு நல்ல பழக்கத்தை சொல்லித் தர வேண்டும் என்று சொன்னால் நாம் அடம்பிடித்து சொல்லித் தருவது ஒருவகை என்றால், நாம் அதைத் தொடர்ந்து செய்யும்பொழுது அதை பார்த்து பார்த்து அவர்களும் அந்த பழக்கத்திற்கு ஆளாவது இன்னொரு வகை. ஒரு அப்பா தினமும் பேப்பர் படிக்கிறார் என்றால் பேப்பர் படி என்று மகளைச் சொல்வது ஒரு வகை. அப்பா படிப்பதை பார்த்து தானும் படிக்க வேண்டும் என்று பழகிக் கொள்வது இன்னொரு வகை. அடியார்கள் உழவாரப்பணி செய்ய உழவாரப் பணிக்கு வருவார்கள், அப்படி வரும் பொழுது சிலர் தங்களது குழந்தைகளையும் கூட்டி வருவார்கள். அடியார்கள் செய்யும் வேலைகள் மற்றும் அவர்களின் தாய் தந்தையர் செய்யும் உழவாரப்பணி இதை பார்த்து யாரும் சொல்லாமலேயே அந்த பிஞ்சுக் கரங்கள் தன்னால் முடிந்த ...